மதுரை அருகேயுள்ள சதுரகிரி மலைக்கு பக்தர்கள் சென்று வழிபட அனுமதி

மதுரை மாவட்டம் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷம் தை அமாவாசையை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள்அனுமதி;

Update: 2022-01-28 17:15 GMT

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் நுழைவு வாயில்

மதுரை மாவட்டத்திற்கு அருகே உளள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷம், தை அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் தரிசனத்திற்காக நடைதிறக்கப்படுகிறது.

ஜனவரி 29 பிரதோஷம் முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை சதுரகிரி மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா. விதிகளை பின்பற்றி பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவிலில் வழக்கம்போல் அன்னதானம் நடைபெறும் 10 பக்தர்கள் பாதுகாப்பான முறையை பின்பற்றி சாமி தரிசனம் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags:    

Similar News