திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, திருமங்கலத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.;

Update: 2021-11-15 01:00 GMT

திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழுவினர்களால், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகளுக்கு "பசுமையை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்திய குழந்தைகள் தின விழா சித்தர்கூடம்,  திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழுவினர்களால் , குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகளுக்கு "பசுமையை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் பயிற்சி,   திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருமங்கலம் கோட்டாட்சியர் த.அனிதா|தலைமையில்  நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பில்,  20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு,   இயற்கை பாதுகாப்பு தொடர்பான தங்களது தனித்திறமைகளை,  பேச்சுத் திறமை, நடனம், சிலம்பம், கவிதை வாசித்தல், ஓவியம் தீட்டுதல் ஆகியவற்றின் மூலம்  வெளிப்படுத்தினார்கள். பசுமை பயிற்சி வகுப்பில் இறகுகள் அம்ரித்தா இயற்கை பேரவை நிறுவனர் இரவீந்திரன் நடராஜன், குழந்தைகளுக்கு " இயற்கை சூழல் பற்றி பயிற்சி" யும்,   மணிகண்டன் "மக்களை மதிக்கும் பண்பு" பற்றிய பயிற்சியும்,  அரசு கல்லூர்கணித பேராசிரியை வ.மீனாம்  குழந்தைகளுக்கு "மாணவர்களின் ஆளுமை மேம்பாடு" பற்றிய பயிற்சியும், இயற்கை  ஆர்வலர் கிருஷ்ணமூர்த்திம் "பனை மரங்களின் பயன்கள்,  சிறப்புகள் குறித்து பயிற்சியும் அளித்தனர்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி பொறுப்பாளர் பல்கீஸ்பேகம் பசுமை பயிற்சியில் குழந்தைகளின் ஈடுபாடு மற்றும் பெற்றோர்களின் ஈடுபாடு குறித்தும் சிறப்புரையாற்றினார். "பசுமையை உருவாக்குவோம்" பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் அவர்கள் திறமையை ஊக்குவிக்கும் வண்ணம் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும்,  சித்தர்கூடம் திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News