திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மத்திய குழு ஆய்வு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மத்திய ஆய்வுக்குழு சோதனை மேற்கொண்டனர்.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மத்திய ஆய்வுக்குழு சோதனை மேற்கொண்டனர். மத்திய ஆய்வுகுழு டாக்டர், கே. நாராயணா பாய் ஹோமியோ மெடிக்கல் காலேஜ், சோட்டானிக்கரை எர்ணாகுளம், டாக்டர் எம்.அருண்குமார் மெடிக்கல் டைரக்டர், டாக்டர். ஷ்ஹியா செய்யத் மத்திய பிரதேசம் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் திருமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராம்குமார் ,டாக்டர் மாதவன், டாக்டர் விஜயலட்சுமி, டாக்டர் பானுமதி, டாக்டர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். சோதனையின் அரசு மருத்துவமனையின் நோயாளிகளின் வார்டு பகுதி மருந்து கொடுக்கும் இடம் சிகிச்சை பகுதி அனைத்தையும் தரம் மேம்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். குறைகள் இருப்பதை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு நடந்ததாக தலைமை மருத்துவர் ராம்குமார் கூறியுள்ளார்.