மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் கொண்டாட்டம்

திருமங்கலம் 27 வார்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.;

Update: 2022-02-24 11:49 GMT

ஜெயலலிதாவின் பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடிய திருமங்கலம் அதிமுகவினர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகர் முழுவதும் நகர செயலாளர் விஜயன் தலைமையில் திருமங்கலம் 27 வார்டு முழுவதும்  திருவுருவப் படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வினை திருமங்கலம் நகர செயலாளர்  விஜயன் துவக்கிவைத்து, ஒவ்வொரு வார்டாக சென்று ஜெயலலிதாவின் உருவ படதிற்கு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

இதில் காசிமாயன்,வாசு மலை, சதீஷ் சண்முகம், ஜெயபாண்டி, பாலமுருகன், வி.டி.ஜே.குமார், ஐயர் பாண்டி, அருண், நேதாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News