தியாகி பகத்சிங் 91 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்

பகத்சிங் 91 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது

Update: 2022-03-23 13:30 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில், மாவீரன் பகத்சிங் 91-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடந்த ரத்ததான முகாம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில், மாவீரன் பகத்சிங் 91-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவருடைய தியாகத்தை போற்றும் வகையில், மதுரை புறநகர் மாவட்ட இளைஞர் மன்றம், மாணவர் மன்றம், மாதர் சம்மேளனம் இணைந்து   இரத்ததான முகாமை நடத்தியது.

இந்நிகழ்வில் திருமங்கலம் அரசு தலைமை மருத்துவர்பா.ராம்குமார்   தலைமை  வகித்தார். அரசு மருத்துவமனை மருத்துவர் (இரத்த வங்கி) வி.மாதவன்  முன்னிலை வகித்தார். மேலும் திருமங்கலம் அரசு மருத்துவமனை,மருத்துவர்கள், மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்பி என்.எஸ்.வி.சித்தன், தொழில் அதிபர் மு.சி.சோ.பா. ஸ்ரீதர், தொழில் அதிபர்  ஹரீஸ் ரெஸ்டாரன்ட் தொழில் அதிபர் எல்.ஈஸ்வர மூர்த்தி,தொழில் அதிபர் ஜெயராமன் ஆகியோர்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

 அரசு மருத்துவ மனை அமைச்சு பணியாளர்கள் சங்க தலைவர் கலாமோகன் மற்றும் திருமங்கலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்(AISF ) தமிழ்நாடு மாநிலச்செயலாளர் தினேஷ் சீரங்கராஜ் .AIYF தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் ரா.தமிழ்பெருமாள்,  சி.பி.ஐ மதுரை மாவட்ட புறநகர் செயலாளர் பா.காளிதாஸ், ஏ.ஐ.கே.எஸ் .மதுரை மாவட்ட செயலாளர் எஸ்.கே.எம் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.சந்தனம், AIYF மதுரை மாவட்டச் செயலாளர் கா.கிருஷ் பாக்கியம்., AISF மதுரை மாவட்ட செயலாளர் கே.சேதுபாண்டி, AISF மதுரை மாவட்டத் தலைவர் ரா.விக்ரம்  NFIW தமிழ்நாடு மாநிலக்குழு எஸ்.சூரியநிலா, NFIW மதுரை மாவட்ட பொறுப்பு செயலாளர் கே.நாகஜோதி பங்கேற்று சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.இதில் 20- க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர். திருமங்கலம் மதுரை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் சுப்புக்காளை நன்றி கூறினார்.

Tags:    

Similar News