திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அதிநவீன கருவி மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இடுப்பு, மூட்டு மாற்று சிகிச்சை செய்து சாதனை.;

Update: 2022-03-09 16:00 GMT

எலும்பு மூட்டு நவீன கருவி பொருத்தி திருமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர் சாதனை.

எலும்பு மூட்டு நவீன கருவி பொருத்தி திருமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர் சாதனை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பல வருடங்களாக எலும்பு மூட்டு தேய்மானம் இடுப்பு தேய்மானம் போன்ற நோய்களால் பாதிப்புக்குள்ளாகி நோயாளிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவீன கருவி பொருத்தி இடுப்பு மற்றும் முழங்கால் மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை முதன்முதலில் நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.

டாக்டர். பி. சிவகரன் அதிநவீன கருவி பொருத்தி சிகிச்சையை அளித்து வருகிறார். ராஜேந்திரன் கப்பலூரை சேர்ந்த இவருக்கு பல வருடங்களாக எலும்பு மூட்டு தேய்மானம் இருந்துவந்துள்ளது இதேபோல் விருதுநகரைச் சேர்ந்த காந்தம்மாள், கப்பலூரரைச் சேர்ந்த ஜெயா இவர்கள் 3 பேருக்கும் மூட்டில் நவீன கருவி பொருத்தி முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

திருமங்கலத்தை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவருக்கு இடுப்பு தேய்மானம் நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இடுப்புக்கு நவீன கருவி பொருத்தி அதிநவீன சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் அரசு தலைமை மருத்துவர் பி.ராம்குமார் அவர்கள் தலைமையில் எலும்பு சிகிச்சை சிறப்பு மருத்துவர் பி.சிவகரன் அவர்கள் இச்சிகிச்சையை முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் முன்பு பல லட்சங்கள் செலவழித்தும் இச் சிகிச்சைக்கு தீர்வு இல்லாதபொழுது தற்போது அரசு மருத்துவமனையில் நவீன கருவி மூலம் இச்சிகிச்சை செய்துவருவது இப்பகுதி மக்களிடையே எலும்பு சிகிச்சை சிறப்பு மருத்துவர் பி.சிவகரன் பெரும் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.

அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர் சிவகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:எலும்பு மூட்டு தேய்மானம், இடுப்பு தேய்மானம் ,முழங்கால் தேய்மானம் போன்ற நோய்களுகள் தனியார் மருத்துவமனையை நாடி பல லட்சங்கள் செலவ. செய்து கஷ்டப்பட வேண்டாம் எனவும் அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்து தருவதாகவும் இதனால் அறுவை சிகிச்சை முடிந்த இரண்டு தினங்களில் வீடு திரும்பலாம், நோயாளிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம், மதுரை மாவட்டம் மற்றும் திருமங்கலம் தொகுதி மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். சிகிச்சையால் எந்தவித பின் விளைவுகள் ஏற்படாது எனவும் இயல்பான நிலையில் இக்கருவி சிகிச்சை செயல்படும் எனவும் கூறியுள்ளார்.

Tags:    

Similar News