மதுரை: திருமங்கலம் ஒன்றியத்தில் திமுகவில் இணைந்த அமமுகவினர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில், அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர் கொ.தனபாண்டியன் முன்னிலையில் திரளி கிராமத்தில் அமமுக ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் அருண் மற்றும் அருள், சதீஸ்குமார், ராமமூர்த்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் தனபாண்டியன் முன்னிலையில் திமுக-வில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட கவுன்சிலர். ஜெயராஜ், ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி, ஆலம்பட்டி மோகன், கரிசல்பட்டி முத்துப்பாண்டி, கண்ணன் மற்றும் பழனி, காண்டை முருகன், சுகு, பிரதாப், சுந்தரபாண்டி, திரளி கிளை செயலாளர் கோட்டையன், பொன்னம்மங்கலம் ஜெயபாண்டி, விருமாண்டி, குமார், பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.