100% மானியத்தில் இளநீர் பறிப்பு கருவி - வேளாண்மைத்துறை தகவல்

மதுரை டி-கல்லுப்பட்டி பகுதியில் இளநீர் பறிக்கும் கருவி, 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுவதாக, வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-11-25 00:30 GMT

இளநீர் பறிப்பு கருவி.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில், வேளாண்மை துறையில், தென்னை மரங்களில் இளநீர் காய்களை பறிக்கும் கருவி 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. 4 ஆயிரம் மதிப்பிலான மரம் ஏறும் கருவியை, விவசாயிகள் வாங்கலாம். இதற்கு, இயந்திரம் வாங்கியபின் ஆதார் எண்,  கம்ப்யூட்டர் சிட்டா,  வங்கி புத்தகங்களுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

மேலும், விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் மானிய தொகையை வரவு வைக்கப்படும். முன்னுரிமை அடிப்படையில் மானியம் பெறலாம் என வேளாண்மை இயக்குனர் விமலா தெரிவித்துள்ளார். தென்னை மரம் வளர்ப்போர், இம்மானிய் கருவியை, மானியத்துடன் வாங்கிப் பயனடையுமாறு,  வேளாண்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News