திருமங்கலம் நகரில் அதிமுகவினர் தீவிரப் பிரசாரம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2022-02-07 14:45 GMT
திருமங்கலம் நகரில் அதிமுகவினர் தீவிரப் பிரசாரம்

திருமங்கலம் நகராட்சி வார்டுகளில போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்.மேற்கொண்டு வருகின்றனர்.

  • whatsapp icon

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் 1வது வார்டு அதிமுக வேட்பாளர் விஜயன், இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்து தருவது உள்ளிட்ட வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து,  17 வது வார்டில் போட்டியிடும் முன்னாள் சேர்மன் உமா விஜயன், இன்று பல்வேறு பகுதிகளில் தீவிரமாக  வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது அதிமுக முக்கிய நிர்வாகிகள், மகளிர் அணியினர் உடன் சென்று வீடுவீடாகச் சென்று, பொதுமக்களின்  வாக்கு சேகரித்தனர்.

Tags:    

Similar News