பசியால் வாடும் ஏழைகளுக்கு தினமும் உணவு வழங்கும் கட்டிட தொழிலாளி

மதுரை திருமங்கலத்தில் கட்டிட தொழிலாளி எவ்வித உதவியும் இன்றி தினமும் சாலையில் பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு வழங்கினார்.

Update: 2022-04-22 02:48 GMT

மதுரை திருமங்கலத்தில் சாலையோர ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் கட்டிட தொழிலாளி ரகுபதி நிறுவனர் நடத்தும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தினமும் சாலையில் பசியோடு வாழும் ஏழைகளுக்கு உணவு கொடுத்து வருகிறார் .இந்நிலையில் இவரது மனைவி பிறந்த தினத்தை முன்னிட்டு திருமங்கலம் தெற்குத் தெரு பகுதியில் நகராட்சி துவக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு பென்சில் படிப்பு சாதனப்பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். இந்நிகழ்வில் அன்னை வசந்தா டிரஸ்ட் தலைவர் அமுதா பழனி முருகன் ,செயலாளர் சித்ரா ரகுபதி, பொருளாளர் அருள்ஜோதி ஆறுமுகம், ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News