ரெம்டெசிவிர் மருந்தை அரசு நேரடியாக கொடுக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர்

Update: 2021-05-16 07:00 GMT

ரெம்டெசிவிர் மருந்தை அரசு நேரடியாக கொடுக்க வேண்டும் எனமுன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

திருமங்கலம் தொகுதியில் உள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி அதனை தொடர்ந்து பேரையூர் அரசு மருத்துவமனையை முன்னாள் அமைச்சரும். திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார் ஆய்வு செய்தியாளர்யிடத்தில் கூறியதாவது,

தற்போது திருமங்கலம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லை அதேபோல் பேரையூர் மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்துள்ளேன்.

தமிழகத்தில் முதல் அலை வீசிய போது தடுப்பு மருந்து கிடையாது அப்படி இருந்தாலும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 38 வருவாய் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு தடுப்பு மருந்து இல்லாத காலத்தில் உயிர்பலி அதிகம் இல்லாமல் மக்களை காத்தார்.

தற்போது இரண்டாம் அலையில் பெட்டுகள் இல்லை , ஆக்ஸிஜன் இல்லை தற்போது நேரு ஸ்டேடியத்தில் உயிர்காக்கும் மருந்தான ரெமிடெசிவிர் மருந்துகளை வாங்க செல்லும் மக்களை ஒழுங்கு படுத்த அரசு தவறி விட்டது இதனால் மக்கள் மிகவும் கொதிப்படைந்து மறியலில் ஈடுபட்டனர்.

ரெமிடெசிவர் மருந்தை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கிடைக்க அரசே நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அதுமட்டுமல்லாது இதற்கு ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து ஆன்லைன் மூலம் பதிவு செய்து வழங்க வேண்டும் அப்படி செய்தால் எந்த முறைகேடும் நடைபெறாது.

முதல் அலையில் மக்களுக்கு தேவையான பெட்வசதிகள் ஆக்ஸிஜன் வசதிகள் மருந்து வசதிகள் அனைத்தும் கிடைக்கப்பெற்றன ஆனால் இன்றைக்கு இரண்டாம் அலையில் மருத்துவமனையில் எங்கள் உயிரை காப்பாற்றுங்கள் என்று தங்களை சேர்க்க மக்கள் வரிசையாக நிற்கின்ற அவலம் உள்ளது இதை தடுக்க இன்னும் கூடுதலாக நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்று அதிமுக அரசில் நடந்தது உண்டா. ஆனால் இன்றைக்கு நாள்தோறும் 32,000 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்து பத்து நாள் ஆகிறது என்று திமுக அரசு சாக்குப்போக்கு சொல்லக்கூடாது.

அதிகாரிகள் மாற்றுவது கவனமாக உள்ளனர் அதேபோல் அறிக்கை பேட்டிகளும் கொடுக்கின்றனர் இது மக்களுக்கு தீர்வாகாது.ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசமி மக்களைக் காக்கும் புனிதப் பணியில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

தற்போது கூட பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதி அதில் தமிழகத்தில் தினந்தோறும் 32,000 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் தமிழகத்திற்கு வழங்கப்படும் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்த வேண்டும் என்றும் ரெம்டெசிவிர் மருந்தை அதிக அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் தடுப்பூசி அதிகளவில் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று எழுதினார்.

தற்போது வார் ரூம் என்று கட்டுப்பாட்டு மையத்தை அரசு திறந்து வருகிறது அதை நான் குறை கூறவில்லை ஆனால் ஏற்கனவே 38 வருவாய் மாவட்டங்களில் அவசர கட்டுப்பாட்டு மையத்தை முன்னாள் முதலமைச்சர் திறந்து வைத்தார் இதில் தகுந்த வழிகாட்டுதல், அறிவுரைகள், மருத்துவமனையில் அனுமதி உள்ளிட்டவற்றை வழங்கி வந்தது இதில் அனைத்து தகவல் தொழில் அத்துடன் அனைத்து கட்டமைப்பைக் கொண்டுள்ளது இதையும் அரசு பயன்படுத்தினால் கூடுதல் பலன் கிடைக்கும்.

தற்போது டவ்தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தற்போது கோரோனா, டவ்தே புயல் ஆகிய இரண்டு பேரிடர்களை அரசு கூடுதல் கவனம் செலுத்தி மக்களை காக்க வேண்டும்.

மக்கள் செத்து மடிவதை கண்டு அரசு சாக்கு போக்கு சொல்லாமல் விலை மதிக்க முடியாத மக்கள் உயிரைக் காக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன் ராமசாமி மகாலிங்கம் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் இருந்தனர்.

Tags:    

Similar News