முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மூத்த மகனும் திருமங்கலம் திமுக வேட்பாளர் மணிமாறனின் சகோதரருமான அறிவழகன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் போட்டியிடுகிறார். திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறன் போட்டியிடுகிறார்.இந்நிலையில் சேடப்பட்டி முத்தையா மூத்த மகனும் திமுக வேட்பாளர் மணிமாறனின் சகோதரருமான அறிவழகன் அதிமுக வேட்பாளர் ஆர் பி உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது எனது தந்தையும் சகோதரரும் திமுக எனும் சேற்றில் விழுந்து எழுந்திருக்க முடியாத நிலையில் உள்ளனர்.திமுகவின் கொள்கைகள் எனக்கு பிடிக்காத காரணத்தினால் தற்போது அதிமுகவில் என்னை இணைத்துக்கொண்டேன்.
திருமங்கலம் தொகுதியை பொறுத்தவரை ஆர் பி உதயகுமார் வெற்றி உறுதியாகிவிட்டது. அவரை தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க நாளை முதல் பிரசாரம் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.