திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் இன்று திறப்பு

அறுபடை வீடுகளில் முதல் படையான ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில் உண்டியலில் 134 கிராம் தங்கம் இருப்பு;

Update: 2021-12-23 17:00 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது .

இதில் ரூபாய் 2 லட்சத்து 18 ஆயிரத்து 923 ரூபாய் ரொக்கம், தங்கம் 134 கிராம் ,வெள்ளி ஒரு கிலோ 80 கிராம் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது . திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம் . இந்நிலையில் கார்த்திகை மாத காணிக்கை உண்டியல் திறப்பு இன்று நடைபெற்றது. உண்டியல் எண்ணும் பணியில் திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் ராமசாமி முன்னிலையில் ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள் ,ஐயப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோவில் பணியாளர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News