ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு: மதுரையிலிருந்து நெடுந்தொலைவு செல்லும் ரயில்கள் ரத்து
ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு தொலைதூர ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக மதுரை தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது
ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் தொலைதூர ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வு பகுதி தாழ்வு மண்டலம் வலுவடைந்து வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி கரையை கடந்ததாக கூறப்பட்டது. இந்நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ,விழுப்புரம் உட்பட்ட சில இடங்களில் மஅதிக மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது .ஆனால் மழை சற்று திசை மாறி ஆந்திரா நோக்கி சென்றதால் சென்னை தப்பியது.
ஆந்திராவில் சித்தூர் நெல்லூர் கடப்பா அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில்வே கோட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து அந்தப் பகுதி வழியாக செல்ல வேண்டிய தொலைதூர ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்டம் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
நவம்பர் 21 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய பைசாபாத் எக்ஸ்பிரஸ் ,புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ,மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய சண்டிகார் எக்ஸ்பிரஸ், நிஜாமுதீன் ,தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் இருந்து புறப்பட வேண்டிய மும்பை எக்ஸ்பிரஸ் ,பெங்களூர் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்படுவதாகவும் மேலும் நவம்பர் 22 அன்று பெங்களூரில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக மதுரை தெற்கு ரயில்வே கோட்டம் தகவல் அறிவித்துள்ளது.