மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் போராட்டம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பத்து வருட காலமாக வேலை செய்த பணியாட்களை பணிநீக்கம் செய்ததை கண்டித்து போராட்டம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக டாக்டர் குமார் பொறுப்பேற்றவுடன் பல்கலைகழகத்தில் பணியாற்றி வந்த நிரந்தரமற்ற தொழிலாளர்கள் 136 பேரை வேலை நீக்கம் செய்தார்.
10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ள தொழிலாளர்களை, சம்பளம் கொடுக்க பணமில்லை என்று புதிய துணை வேந்தர் பணி நீக்கம் செய்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு துறையில் வெளியே அனுப்பப்பட்டவர்களுக்கு பதிலாக புதிய பணியாட்களை பணியில் அமர்த்தியுள்ளனர்.
இதனை கண்டித்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருந்து போராடும் தொழிலாளர்களை காவல்துறை மூலம் வெளியே தள்ளியுள்ளனர். தற்போது போராடும் தொழிலாளர்கள் வளாகத்துக்கு வெளியே, பல்கலைகழகத்தின் விளையாட்டுத் திடலில் போராட்டத்தைத தொடர்ந்து வருகின்றனார்.
இன்று Save MKU அமைப்பின் சார்பில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற குழுவில் AICCTU மதுரை மாவட்ட அமைப்பாளர் மதிவாணன் குகநாதன் கலந்து கொண்டனர்.