மதுரையில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியவர் கைது
மதுரை அவனியாபுரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை அவனியாபுரம் முத்துக்குமார் சேர்வை தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் பிரகாஷ் வயது 26. அவனியாபுரம். ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் புறா கார்த்திக்; மூன்று மாதங்களுக்கு முன்பு கார்த்திக் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதனால் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், பிரசன்னா காலனியில் சென்ற பிரகாசை, மருதுபாண்டி வயது 21, புறா கார்த்திக் அகிய் அஇருவரும் வழிமறித்து அவரை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பிரகாஷ் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதுபாண்டியை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.