ஓமைக்ரான் வைரஸ்: ஜனவரிக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார் அமைச்சர் பொன்முடி
சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது.:ஓமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் தேர்வுகள் நடைபெறுவது குறித்த கேள்விக்கு ?அமெரிக்காவிலும் இதுகுறித்து கூறியுள்ளன.ர் ஜனவரி மாதத்திற்கு பிறகு அதனைப் பார்த்துக் கொள்வோம் என பதிலளித்தார்.கல்வி நிலையங்களில் அதிகரித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு இது குறித்து முதலமைச்சர் கடுமையாக எச்சரித்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றார் அமைச்சர் பொன்முடி.