நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய நபரால் மதுரையில் பரபரப்பு
மதுரை பரம்பு பட்டியில் நாட்டு துப்பாக்கியுடன் சென்ற நபரால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.;
மதுரை பெருங்குடி பரம்புப்பட்டியில், நாட்டு துப்பாக்கியுடன் மர்ம நபர் சுற்றி வருவதாக, அப்பகுதி மக்கள் பெருங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் பெருங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்களுடன் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
விசாரணையில் பரம்புப்பட்டி, மேலே தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன் வயது(24)என்பது தெரியவந்தது. கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து, அவர் கையில் இருந்த 5 அடி நீளமுள்ள நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.