மதுரை காமராஜர் பல்கலை., துணை வேந்தர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 136தொகுப்பூதிய பணியாளர்கள் இரண்டாம் நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-19 13:00 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 136 தொகுப்பூதிய பணியாளர்கள் இரண்டாம் நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பணி நீக்கம் செய்ததை கண்டித்து 136 பணியாளர்கள் 6 ஆவது நாளாக துணை வேந்தர் அலுவலகம் முன் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 136 தொகுப்பூதிய பணியாளர்கள் கடந்த 12ஆம் தேதி முதல் வேலையில் இருந்து நீக்கினர்.

காமராஜர் பல்கலைக்கழகத்தின் நிதி பற்றாக்குறை காரணமாக தொகுப்பூதிய பணியாளர்கள் 136 பேர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்கள் கடந்த 13ம் தேதி முதல் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் கடந்த இரண்டு நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு .க ஸ்டாலின் அவர்கள் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நீக்கம் செய்யப்பட்ட   136 பேரையும் மீண்டும் வேலையில் அமர்த்தி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News