மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கார்ப்பரேட் நிறுவனம் போல் நடந்தது கண்டிக்கத்தக்கது

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 136 பேர் வேலைநீக்கத்தில் கார்ப்பரேட் நிறுவனம் போல் செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது

Update: 2022-04-26 12:15 GMT

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பின் செயலாளர் முரளி

மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகம் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் 136 தற்காலிக பணியாளர்களை சில தினங்களுக்கு முன்னதாக பணி நீக்கம் செய்தது. இது தொடர்பாக, மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், கூட்டமைப்பின் செயலாளர் முரளி கூறுகையில், புதிதாக துணைவேந்தர் வந்தவுடன் 136 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுளார்கள். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் முறையான தகுதியின் அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணி புரிந்தவர்கள். இதில் பலர் பட்டபடிப்பும், பட்டயப்படிப்பும் முடித்தவர்கள். தற்போது அரசு வேலைகளுக்கு கூட விண்ணப்பிக்க முடியாத அளவிற்கு வயதாகி விட்டது.

பல்கலையில் நிதிச்சுமையை காரணம் காட்டி இந்த பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகின்றது. கடந்த பத்து ஆண்டுகளில் படிப்படியாக நிதி நெருக்கடிக்கு ஆளானது ஏன் என்று நாங்கள் கேட்கின்றோம். முறையற்ற நிர்வாகத் தினால் இந்த நெருக்கடிக்கு காரணமானவர்களின் மீது பல புகார்கள் இருந்தும், வழக்குகள் தொடுக்கப்பட் டிருந்தும், இதுவரை அவர்கள் மீது பல்கலைகழகம் என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்பதை சொல்லமுடியுமா? இப்படி, யார் யாரோ செய்த தவறுகளுக்குகாக இன்று இவர்கள் பலிகடா ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

எந்த ஒரு உத்தரவும் கொடுக்காமல் வாய்மொழி மூலமே அவர்களை பணியிலிருந்து நீக்கியதை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம், நிர்வாகத்தால் அறம் கொண்ட ஒரு சிறப்பு மாதிரியாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகம் ஒரு கார்பரேட் நிறுவனம் செயல்பட்டுள்ளது. இன்று 136 குடும்பங்கள் அதரவின்றி தவிக்கிறார்கள். நிதி நிலையை மேம்படுத்தப் புதிய துணைவேந்தர் தலைமையிலான நிர்வாகம் செயல்படும் என்று நம்புகிறோம். தமிழக முதல்வர் இதை கவனத்தில் கொண்டு, பணி நீக்கம் செய்த பணியா ளர்களை மீண்டும் பணியிலமர்த்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News