கடந்த பத்தாண்டுகளில் அதிமுக ஆட்சியில் எந்த தொழிலும் தொடங்கவில்லை, வேலை வாய்ப்பும் தரவில்லை என மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்பி குற்றம் சாட்டினார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பொன்னுத்தாையை ஆதரித்து மதுரை ஹார்விபட்டி நுழைவாயில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி ஆதரித்து பேசினார். அப்பொழுது அவர் கூறும்போது தற்போதைய அதிமுக அரசில் 13 பேர் தூத்துக்குடியில் கொலை செய்யப்படுகிறார்கள்.
பொள்ளாச்சியில் 250 பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். இவர்களை நம்பி யார் தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முடியும் ? அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை. யாருக்கும் வேலை வாய்ப்பு இல்லை.நீட் தேர்வினால் வெளி மாநிலத்தவர்களுக்கே அதிக இடம் கிடைக்கும் என்றார்.