மதுரை அருகே கஞ்சா விற்ற இரு பெண்கள் கைது

நாகமலை புதுக்கோட்டைப் பகுதியில், கஞ்சா விற்பனை செய்த பெண்களை கைது போலீசார் செய்தனர்.;

Update: 2022-03-15 23:45 GMT

கைதான பெண்கள்.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமாத்தூர் ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த  ரத்தினம்,  வசந்தா  ராணி ஆகிய  2 நபர்களை கைதுசெய்து செய்தனர்.

இது சம்பந்தமாக,  நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும்  கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா 25 கிலோ  மற்றும் ரூபாய் 5500/- பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News