திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம் பக்தர்கள் தரிசனம்
அறுபடை வீடுகளின் முதற் படையான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 11-ம தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் கார்த்திகை விழாவினையொட்டி தினமும் சுவாமி தெய்வானையுடன் காலையிலும் மாலையிலும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மலை மீது மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
முன்னதாக காலையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.மாலை 5 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு மூலஸ்தானத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மாலை ஆறு மணிக்குள் தீபம் ஏற்றப்பட்டது.
அதே நேரத்தில் மலைமீது மூன்றரை அடி உயரம் இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர அண்டாவில் 400 ஒ லிட்டர் நெய் 100 மீட்டர் நீளம் கொண்ட துணியினாலான 5 கிலோ கற்பூரம் வைத்து மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.மகா தீபத்தை பல்லாயிரக்கணக்கான முருகபெருமானை அரோகர கோஷமிடடு தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் மலை மீது மகா தீபத்தை சரி தரிசித்து விட்டு தங்கள் இல்லங்களில் விளக்கு ஏற்றி கார்த்திகை விழாவின கொண்டாடினர்.இரவு 7 மணி அளவில் 16 கால் மண்டபம் முன்பு சொக்கப்பன் பந்தம் கொளுத்தப்பட்டது.
இதனை தமிழகம் பல்வேறு மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்து சாம்பலை எடுத்து தங்கள் நெற்றியில் பயபக்தியுடன் வைத்து தரிசனம் செய்தனர்.இதனை அடுத்து இரவு 8 மணிக்கு சுவாமி தெய்வானை உடன் சிறப்பு அலங்காரத்தில் திருவச்சியில் மண்டபத்தை சுற்றி வந்து அருள்பாலித்தார்.விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை தீர்த்த உற்சவம் நடைபெறும் விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர் .தீபத் திருவிழா நடைபெறுவதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.