ஊரடங்கு அமல்: வெளியூருக்கு செல்ல முடியாமல் காத்திருக்கும் விமானப் பயணிகள்
மதுரை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கால் வெளியூர் செல்லும் பயணிகள் தவிப்பு.
மதுரை கோரோணா பரவல் காரணமாக தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழுவதும் அங்கு தமிழக அரசு அமல் படுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் விமான போக்குவரத்து தடையின்றி செயல்படுவதால் மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு வெளி மாநிலங்கள் செல்வதற்காக விமான நிலையத்தில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் .
மதுரை விமான நிலையத்தில் இருந்து துபை ,சார்ஜா உள்ளிட்ட வெளிநாடு விமானங்களும் தில்லி ,ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநில விமானங்களும் வந்து செல்கின்றன. இந்த விமான நிலையத்தில் தென் மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள்,பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். தென் மாவட்டங்களில் முக்கியமான விமான நிலையமாக மதுரை விமான நிலையம் திகழ்கிறதுஉள்ளதால்.
குறிப்பாக மதுரையில் இருந்து நேரடியாக துபாய்க்கு விமானம் சேவை இருப்பதால் அதற்கான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 3 மணி நேரம் காத்திருந்த பின்னர் அதன் முடிவுகள் வந்த பிறகு அவர்கள் விமானத்திற்கு அனுப்பப்படுவதால், வழக்கத்தைவிட இன்று விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், மதுரை விமான நிலையத்தில் இருந்து தங்களது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் பயணிகளை வழியனுப்ப வருபவர்களும் திரும்பி செல்லும் வழியில் காவல்துறையினர் வாகனங்களை அனுமதிக்காத நிலையில் தங்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும். எனவே விமான நிலையத்தில் இருந்து வெளிவரும் பயணிகள் மற்றும் பயணிகளை வழியனுப்ப வருபவர்களுக்கும் போக்குவரத்து சிரமம் உள்ளதாக கூறுகின்றனர்.