கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: கணவன் மனைவி உள்பட 3 பேரிடம் விசாரணை

மதுரை வில்லாபுரத்தில் கனடாவில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்த கணவன் மனைவி மீது போலீஸார் வழக்கு பதிவு

Update: 2021-11-24 00:30 GMT

மதுரை வில்லாபுரம் பகுதியில் கனடாவில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்த புகாரில்கணவன்-மனைவி உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், வில்லாபுரம், மணிகண்டன் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு( 31 ). இவர் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி சேர்ந்தவர் குருநாதன்( 31 ) அவரது மனைவி பானுப்பிரியா, உறவினர் முருகேசன்  ஆகிய  சேர்ந்து மூவரும் கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, மதுரை விமான நிலையத்தில் வைத்து தினேஷ்பாபுவிடம் ரூ. 10 லட்சம் 34 ஆயிரம் பெற்றுள்ளனர் . ஆனால், இவர் கூறியபடி  வேலை வாங்கித் தராமல் அலைக்கழித்து  ஏமாற்றியது தெரிய வந்தது. இது குறித்து  தினேஷ்பாபு அவனியாபுரம்  காவல் நிலையத்தில் புகார் செய்தார் . புகாரின் அடிப்படையில் போலீசார் குருநாதன் மற்றும் மனைவி பானுப்பிரியா உறவினர் முருகேசன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

Similar News