மதுரையில் சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-03-20 11:42 GMT

மதுரை முத்து பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிரேசன் வயது (19) இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கதிரேசன் தனது வீட்டின் அருகே வசித்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.

இச்சம்பவம் அந்த சிறுமியின் வீட்டுக்கு தெரியவந்தது. இதனையடுத்து  சிறுமியின் பெற்றோர்கள் மதுரை செல்லூர் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும் கதிரேசன் சிறுமியுடன் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்த நிலையில், கதிரேசன் அந்த சிறுமிியை அவனியாபுரம் பைபாஸ் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் பிரியா, கதிரேசன் மீது வழக்குப்பதிவு செய்து  அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News