ஊரடங்கு காலத்தில் ஊர் சுற்ற மாட்டேன் - என உறுதி மொழி வாங்கும் காவல்துறையினர்.

திருப்பரங்குன்றத்தில் ஊரடங்கு விதிகளை மதியாதவர்களுக்கு காவல்துறை நுாதன தண்டனை- மக்கள் வரவேற்பு.

Update: 2021-05-20 07:45 GMT
ஊரடங்கு விதிமீறல் -உறுதிமொழி வாங்கும் காவலர்கள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மதிக்காமல்  வாகனங்களில்  செல்கின்றனர்.

திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சண்முகம் மற்றும் காவல்துறையினர் அவர் எல்லைக்குட்பட்ட  பகுதியில் ஆறு சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை அத்தியாவசிமின்றி நடமாடிய பொதுமக்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு இ பதிவு  மற்றும் அலுவலக அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் .

மற்றவர்களை தடுத்து நிறுத்தி காவல் உதவி ஆணையர் சண்முகம் கொரோனா காலங்களில் வெளியில் ஊர் சுற்ற மாட்டேன் மற்றும் சமுக இடைவெளியுடன் பாதுகாப்பாக இருப்பேன் என உறுதி மொழி எடுக்க வைத்து அதன் பின் அவர்களை திருப்பி அனுப்பினார்.

தேவையில்லாமல், வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு அபதார தொகை விதிக்காமல் அவர்களுக்கு அரிவுரை கூறி உறுதி மொழியுடன் திருப்பி அனுப்பும் மனிதாபிமான செயலை அனைவரும் பாராட்டுகின்றனர் .

Tags:    

Similar News