அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க போக்குவரத்துதுறை அமைச்சர் முடிவு.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.
மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விமானம் மூலம் மதுரை வருகை தந்த போக்குவரத்துதுறை அமைச்சர் கண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் நாளை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளதாக தெரிவித்தார்.மேலும் மகளிர்க்கு இலவச பேருந்து பயண திட்டம் பொதுமக்கள் இடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது .
மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து முன் களப் பணியாளர்களுக்கு பேருந்துகள் இயக்குவது குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கை நிறைவேற்றிய பிறகு, 1 லட்சத்து 22 ஆயிரம் தொழிலாளர்களும், 20 ஆயிரம் பேருந்துகளும் இருக்கக் கூடிய போக்குவரத்து துறையை சீரமைக்கும் பணிகள் துவங்கப்படும்.
மாவட்டந்தோறும் தேவைப்பட்டால், முதல்வர் மற்றும் சுகாதார மந்திரிகளின் ஆலோசனைப் படி, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி, ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட ஆம்புலன்ஸ் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.