ஒருவருக்கொருவர் ஆதரவு திரட்டிய எம்எல்ஏ.,கள்

Update: 2021-03-18 05:15 GMT

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் எதிரெதிரே போட்டியிட இருந்த எம்.எல்.ஏ.க்கள் ஒரே கூட்டணியில் இணைந்து நேரில் சந்தித்து ஒருவருக்கொருவர் ஆதரவு திரட்டினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜன்செல்லப்பா மற்றும் திருப்பரங்குன்றம் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணனுக்கு திருப்பரங்குன்றம் தொகுதி வழங்கப்படாததால் திமுகவில் இருந்து விலகி தற்சமயம் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவில் இணைந்தார்.

சரவணன் பாஜகவில் இணைந்த அன்றைக்கே அவருக்கு மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக பாஜக தலைமை அதிகார பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், அதிமுகவின் கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார். தொடர்ந்து திமுகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன் பாஜக சார்பில் மதுரை வடக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.திமுக சார்பில் சீட்டு ஒதுக்கப்பட்டு இருந்தால் தற்சமயம் திருப்பரங்குன்றம் தொகுதியில் வேட்பாளராக களத்தில் உள்ள ராஜன்செல்லப்பாவை எதிர்த்து சரவணன் போட்டியிட வாய்ப்பு இருந்திருக்கும்.

ஆனால் , திமுக வில் அவருக்கு சீட் மறுக்கப்பட்ட காரணத்தினால் இருவரும் ஒரே கூட்டணியில் உள்ளனர்.எதிரெதிரே போட்டியிட இருந்த இருவரும் தற்போது கூட்டணிக் கட்சியின் மூலமாக நண்பர்களாக மாறி ஒருவரை ஒருவர் அவரவர் தொகுதியில் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Tags:    

Similar News