சோழவந்தானில் கடன் பிரச்சனையால் மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை

மதுரை சோழவந்தானில், மருந்து விற்பனை பிரதிநிதி கடன் தொந்தரவால் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-03-22 00:30 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் தெற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர்,  மதுரையில் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். நேற்று, அவ்வழியே சென்ற பயணிகள் ரயில் முன் பாய்ந்து மூர்த்தி தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து,  ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், மூர்த்திக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில் இரண்டு மாத குழந்தைகள் உள்ளதாகவும், மனைவி மற்றும் குடும்பச் செலவுக்கு ஏற்பட்ட கடனைஅடைக்க முடியாத நிலையில் மனவருத்தத்தில் மூர்த்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது. கடன்  கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டதால், வேறு வழியின்றி, தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News