கொடிக்குளம் அருகே பேருந்து மீது மாணவர்கள் கல்வீச்சு: போலீசார் விசாரணை
மதுரை கொடிக்குளம் பகுதியில், அரசு பேருந்தை மறித்து, மாணவர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர்.;
கல்வீச்சில் கண்ணாடி சேதமடைந்த அரசு பஸ்.
மதுரை, கொடிக்குளம் தேசிய நான்கு வழி சாலை வழியாக, அரசு மாநகர பேருந்து நேற்று காலை 8.45 மணிக்கு கொடிக்குளம் பாலம் வழியாக சென்றுள்ளது. அப்போது, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்தை நிறுத்தி பள்ளிக்கு செல்ல மறைத்துள்ளனர்
ஆனால் மாணவர்களை ஏற்றாமல் பேருந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் காத்திருந்து பள்ளிக்கு செல்ல பேருந்து நிற்காமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், கல்லை எடுத்து பஸ் மீது வீசியுள்ளனர். இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தன..
உடனடியாக பேருந்தை ஓட்டுநர் நிறுத்திவிட்டு மாணவர்களை பிடிக்க முற்பட்டுள்ளார். ஆனால், அவர்கள் தப்பிவிட்டனர். இச்சம்பவம் குறித்து, பேரூந்து ஓட்டுநர் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.