மதுரை சோழவந்தான் அருகே வீடுபுகுந்து கத்திமுனையில் 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள வடகாடுபட்டியில் சவுந்திரபாண்டி(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ள நிலையில் அருகில் தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டியை வீடுபுகுந்து மிரட்டி பாலியல் தொல்லை செய்ததுடன் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அக்கம்பக்கத்திலிருந்த பொதுமக்கள் மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காடுபட்டி போலீசார் இது சம்பந்தமாக சவுந்திரபாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.