ஓய்வு பெற்ற காவல் சார்பு ஆய்வாளர் கத்தியால் குத்தி கொலை

திருவிழாவில் பங்கேற்ற ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளரை கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-06-09 01:15 GMT

கொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் ஜோதி.

மதுரை மாவட்டம், தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்த திருவிழாவில் ஜோதி பங்கேற்றுள்ளார். அப்போது அங்கு வந்த போதை ஆசாமிகள் சிலர் கையில் வைத்திருந்த பணத்தை அபகரிக்க முயன்றனர்.

அதனை தடுக்க முயன்ற ஜோதியை கத்தியால் குத்தியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவிழாவிற்கு சாமி கும்பிட வந்த ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் கொலை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News