மதுரை வாடிப்பட்டியில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய மினிபஸ் டிரைவர் கைது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆசைவார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.;
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பூச்சப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாண்டியன் வயது(40) ஏற்கனவே திருமணமானவர்.
இவர் அப்பகுதியில் மினி பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வாடிப்பட்டி பகுதியில் 12-ம வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியிடம் தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மாணவி 4 மாதம் கர்ப்பமாக உளளார். மாணவி கர்ப்பம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பெற்றோர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர் .புகாரின் அடிப்படையில் வாடிப்பட்டி போலீசார் டிரைவர் தங்க பாண்டியனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.