சோழவந்தான் பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Update: 2021-05-28 04:38 GMT

கொரோனா சிகிச்சை மையம் அமைக்க  எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்.

தமிழ்நாட்டில் மதுரை,சேலம்,திருப்பூர்,கோவை, ஈரோடு,திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றுநோய் அதிகமாக மக்களைப் பாதித்து வருவதாக அரசு அறிவித்துள்ளது.மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோணா நோயாளிகள் அதிகமாக இருப்பதால் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி உட்பட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இடமில்லாமல் கொரோனா நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில். வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி,மாவட்டகலெக்டர் அனீஸ்சேகர், மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி ஆகியோரின் ஆலோசனையின்பேரில்சோழவந்தான் பேரூராட்சி செயல்அலுவலர் ஜீலான்பானு,கச்சைகட்டி அரசு ஆரம்பசுகாதார நிலைய தலைமை மருத்துவர் மனோஜ்பாண்டியன்,இளநிலை உதவியாளர்முத்துக்குமார்,,சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணன்,தூய்மைப்பணி மேற்பார்வையாளர் திலீபன்சக்ரவர்த்தி ஆகியோர் சோழவந்தான் அரசுஅரசஞ்சண்முகனார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொரோனா நோய் சிகிச்சை மையம் அமைக்கஅங்குசென்று ஏற்பாடு செய்துவந்தனர்.

இச்செய்தி அப்பகுதியில் உள்ள மக்களுக்கு காட்டுத் தீ போல் பரவியது.இதனால் அப்பகுதி மக்கள் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க கூடிய பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். இங்கு நடந்து கொண்டிருந்த பணியை செய்யவிடாமல் வேலை செய்யும் உபரணங்களை எடுத்து தூர எறிந்து உள்ளனர். அங்கு பணிபுரிந்தவர்களையே அங்கிருந்து வெளியேற்றினர் பின்னர் அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு ஒரே பரபரப்பாக காணப்பட்டது. சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோசனா உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆலங்கொட்டாரம் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கூறும்போது, எங்கள் பகுதி விவசாயபகுதி காலை முதல் இரவு வரை தொடர்ந்து நாங்கள் இப்பகுதியில் ஆடு,மாடு மேய்த்துக் கொண்டு விவசாய வேலையை பார்த்து வருகிறோம்.எங்களுக்கு இப்பள்ளியை சுற்றி தான் நாங்கள் வந்து செல்ல வேண்டும்.எங்கள் பகுதியில் கொரோனா தொற்று நோய் இல்லை.தற்போது இங்கு சிகிச்சை மையம் வைத்தால் குழந்தை முதல் பெரியவர் வரை பாதிக்கப்படும் என்று அச்சத்தில் நாங்கள் இதை எதிர்க்கிறோம் என்று கூறினார்கள். இதன்பேரில் அங்கு கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்த சென்றவர்கள் அனைவரும் திரும்பி சென்று விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் ஒரே பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து மருத்துவரிடம் பேசி அங்கே ஏற்பாடு செய்வதா, மாற்று இடத்தில் ஏற்பாடு செய்வதாஎன்று முடிவு செய்வோம் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Similar News