ஊராட்சிமன்ற நிதியில் முறைகேடு: உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பு
மதுரைமாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் நிதி ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாக உறுப்பினர்கள்புகார்;
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்கால் ஊராட்சியில் தேசிய ஊரக வளர்ச்சி நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக உறுப்பினர் புகார் தெரிவித்து பதவி விலகுவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய ஊரக வளர்ச்சி திட்ட நிதியில் முறையாக வார்டுகளுக்கு ஒதுக்காமல் ஊராட்சி நிதியே ஒப்புதல் பெறாமல் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறி ஊராட்சி மன்ற 8-வார்டு உறுப்பினர்கள் தலைவர் துணைத் தலைவரை சந்தித்து கணக்கு அறிக்கை கேட்டபோது முறையான அறிவிப்பு கொடுக்கவில்லை. அதற்கான பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது
இந்த நிலையில், ஏழு மாதங்களுக்குப் பிறகு மேலக்கால் ஊராட்சி மன்றத்தின் தலைவர் தலைவர் முருகேஸ்வரி தலைமையில் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தீர்மானங்கள் குறித்து காரசாரமாக கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு வாக்குவாதம் எழுந்தது.இதையடுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுமார் ஏழு பேர் ராஜினாமா கடிதத்துடன் யூனியன் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இதனால் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது