அலங்காநல்லூர் ஆலையில் கரும்பு அரவை: கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை

அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர், கையில் கரும்புடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update: 2021-12-21 00:15 GMT

அலங்காநல்லூரில், கரும்புடன் ஆர்ப்பாட்டம் செய்த கம்யூனிஸ்ட் கட்சியினர்.

தென் மாவட்டத்தின் ஒரே  சர்க்கரை ஆலை,  அலங்காநல்லூரில்பமைந்துள்ளது. இங்கு உள்ள ஆலையில், விளைவித்த கரும்புகளை விவசாயிகள் கொண்டு வருகின்றனர். தற்போது இரண்டு ஆண்டுகளாக புதிய கரும்பு உற்பத்தி இல்லை  எனக்கூறியும் அரவைக்கு குறைந்த அளவே கரும்பு வருவதாக கூறியும் ,சர்க்கரை உற்பத்திக்கான கரும்பு அரவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில்,  தற்போது அரவைக்கு  போதிய கரும்பு உள்ளதாகவும் கரும்பு அரவையை  துவக்க வேண்டும் என வலியுறுத்தி,  விவசாயிகள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரும்பு விவசாயிகளுக்காக ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில், அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விவசாயிகள் கையில் கரும்புடன் பங்கேற்று கரும்பு அரவை இயக்கக்கோரியும்,  ஆலைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News