15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொத்தனார் கைது

மதுரை பாலமேடு பகுதியில் 15 வயது சிறுமிக்கு குடிபோதையில் பாலியல் தொந்தரவு செய்த கொத்தனார் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்;

Update: 2021-12-23 17:00 GMT

மதுரை பாலமேடு அருகே வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியிடம் குடிபோதையில் அத்துமீறி பாலியல் தொந்தரவு செய்த கொத்தனார் போக்ஸோ வழக்கில் கைது  செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் முருகன் (34) இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் குடிபோதையில் அருகே வீட்டில் தனியாக இருந்த 15 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை  அத்துமீறி பாலியல் தொந்தரவு  சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் பயந்து போன சிறுமி அலறி உள்ளர் . சிறுமியின் அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர்  வந்து பார்த்தபோது கொத்தனார் செந்தில்முருகன் அங்கிருந்து தப்பியோட முயன்றார் . பொதுமக்கள் அந்த வாலிபர் செந்தில் முருகனை பிடித்து, பாலமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாலமேடு காவல் நிலைய போலீசார் சிறுமியுடன் வாக்குமூலம் பெற்று சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கொத்தனார் செந்தில் முருகன் மீது  போக்ஸோ பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News