கோயிலுக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: போலீஸார் விசாரணை
சோழவந்தான் அருகே அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை பகுதியை சேர்ந்தவர் நாகையா இவரது மனைவி பேபி சரோஜா இருவரும் என்று தென்கரை பகுதியில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சாமி தரிசனம் முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பேபி சரோஜா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.இச்சம்பவம் குறித்து பேபி சரோஜா அப்பகுதி சரகத்திற்கு உட்பட்ட காடுப்பட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் ம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.