மது வாங்கும்போது டாஸ்மாக் கடையில் மோதல் : ஒருவர் குத்திக்கொலை
மதுரை ஒத்தக்கடை பகுதியில் தீபாவளி கொண்டாட டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட மோதலால் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.;
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியில் நேற்று இரவு ராமகிருஷ்ணன் ( வயது 40) மற்றும் 3 பேர் இணைந்து மது வாங்கி குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் ராமகிருஷ்ணன் குத்தி கொலை செய்யப்பட்டார்.
கொலையான ராமகிருஷ்ணனின் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யவும், கொலையானவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.