பாபர் மசூதி இடிப்பு நாள் போராட்டம் : இஸ்லாமியர்கள் மீதான வழக்கு ரத்து
இஸ்லாமியர்கள் மீதான பாபர் மசூதி இடிப்பு நாள் போராட்ட வழக்குகளை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு;
இந்தியாவில் ஆட்சி செய்த முதல் முகலாய மன்னர் பாபர் இவரின் மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பாபர் மசூதி இடிப்பு தினம் நினைவுகூரப்படுகிறது .
இதற்காக இஸ்லாமியர்கள் டிசம்பர் 6ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் .இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினம் அன்று போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.அதன்படி டிசம்பர் 7ஆம் தேதி ஏர்வாடி பேருந்து நிலையம் அருகில் போராடிய இஸ்லாமியர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் களக்காடு சேர்ந்த முகமது ஒமர் அப்துல்லா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த வழக்கு உயர் நீதிமன்ற கிளை நீதிபதி சுவாமி நாதன் முன்னிலையில் விசாரணைக்கு என்று வந்தது.இதனை விசாரித்த நீதிபதி ஏர்வாடி பேருந்து நிலையம் அருகில் போராடிய இஸ்லாமியர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.