கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர்

மதுரையில் இலவச தடுப்பூசி முகாம் பாண்டிய வெள்ளாளர் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

Update: 2021-08-04 08:00 GMT

தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. 

மதுரையில், ஏபிஜே அப்துல்கலாம் இளைஞர் பேரவை, 66-வது வட்ட பொதுமக்கள் நலச்சங்கம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்திய இலவச தடுப்பூசி முகாம் பாண்டிய வெள்ளாளர் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது . இந்த முகாமை, முன்னாள் அதிமுக அமைச்சரும், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ எம்எல்ஏ மற்றும் மாநகர நிர்வாகிகள், வில்லாபுரம் ராஜா, அண்ணாதுரை, எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் ஜெயபால், மாநில மாணவர் அணிச்செயலர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News