மதுரை: மகாத்மா காந்தி உருவச் சிலைக்கு அமைச்சர்- ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

100 ஆண்டுகளுக்கு முன் காந்திஜி அரை ஆடைக்கு மாறிய நாளை போற்றும் வகையில் அவருக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது

Update: 2021-09-22 04:52 GMT

மதுரையில் உள்ள மகாத்மாகாந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் மூர்த்தி மற்றும் ஆட்சியர் அனீஷ்சேகர்

மதுரையில் காந்தியடிகள் அரையாடைக்கு மாறிய நினைவு நாளான இன்று  அவரது உருவச்சிலைக்கு  அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர், ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதுரை ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக, மகாத்மா காந்தியடிகள், கோட், சூட்டிலிருந்து அரையாடைக்கு மாறினார். அந்த நிகழ்வு நடந்து நூறாண்டுகள் நிறைவடைந்த நாளான இன்று (22.9.2021) மகாத்மா காந்தியடிகளின் ஆடைப்புரட்சி நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, மதுரை  காமராஜர் சாலை அருகில் உள்ள காந்தி பொட்டலில் உள்ள காந்தியடிகளின் உருவச் சிலைக்கு,  தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி , மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமான பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News