மதுரையில், நீதிமன்ற உத்தரவுப்படி வீடுகள், கடைகள் காலி செய்யவுள்ளதை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் மறியல்

மதுரையில், நீதிமன்ற உத்தரவுப்படி வீடுகள், கடைகள் காலி செய்யவுள்ளதை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிப்படைந்தது.;

Update: 2021-07-12 07:47 GMT

மதுரையில் வீடு கடைகளை காலி செய்ய மறுத்து எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்.

மதுரை:

இன்று,திங்கள்கிழமை, காலை 8. 30 மணிக்கு மதுரை மீனாட்சிபுரம், முல்லைநகர் ஆகிய பகுதியில் உயர்நீதிமன்ற உத்தரவுபடி, அப்பகுதியில்  உள்ள வீடு, கடைகள் காலி செய்வதற்காக முதல் கட்ட நடவடிக்கையாக மின் இணைப்பை துண்டிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பீபீ குளம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன்,அப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அவர்களை போலீஸார் அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்த முயன்றனர். இதனால், மீனாட்சிபுரம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும், அப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News