மதுரை மீன்மார்க்கெட்டில் மீன்கள் பறிமுதல்:
மதுரை மீன் மார்க்கெட்டில் மீன்கள் பறிமுதல்:;
மதுரை கரிமேடு மீன் மார்க்கெட்டில் 40 கிலோ எடையுள்ள அழுகிய மீன்களை உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மீன் இறைச்சிகள் பெருமளவில் கரிமேடு மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த கரிமேடு மீன் மார்க்கெட்டிற்கு கடலோர பகுதிகளில் பிடிக்கும் மீன்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கரிமேடு மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன் இறைச்சிகள் மற்றும் அழுகிய மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் வந்த சூழ்நிலையில், இன்றைய தினம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களோடு சேர்ந்து திடீரென கரிமேடு மீன் மார்க்கெட் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சாப்பிட தகுதியற்ற அழுகிய நிலையில் மீன்கள் இருப்பது கண்டறியப்பட்டது.சுமார் 40 கிலோ எடையுள்ள அழுகிய மீன்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து கிருமி நாசினி தெளித்து அழித்தனர். மதுரையில், பிரபலமான கரிமேடு மீன் மார்க்கெட்டில் 40 கிலோ எடையுள்ள அழுகிய மீன்கள் பிடிபட்டது. மதுரை மக்கள் மட்டுமல்லாது அசைவ பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.