தடகளபோட்டியில் பங்கேற்ற மாணவிக்கு கல்லூரியின் நிதி:அமைச்சர்கள் வழங்கல்
டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்ற மாணவிக்கு பரிசு.
மதுரை:
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தடகள வீராங்கணை ரேவதிக்கு, மதுரை லேடி டோக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரேவதியை பாராட்டி கல்லூரி சார்பில் ஒரு லட்சம் நிதி வழங்கப்பட்டது. அந்த நிதியை பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், கல்லூரி முதல்வர் கிரிஸ்டியானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிதியை வழங்கிய அமைச்சர்கள் மாணவியை, மேடையில் பாராட்டி பேசினார்கள். முன்னதாக, கல்லூரி மாணவி ரேவதியை, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் பாராட்டி பேசினர்.