பெட்ரோல் விலை உயர்வு: பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த பார்வர்டு பிளாக் கட்சியினர்;

Update: 2021-07-26 11:08 GMT


பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக்கண்டித்து மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை  கோச்சடையில் உள்ள, பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. பி.வி. கதிரவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற  நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள்  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து  முழக்கமிட்டனர். இதில், மாநில தொழிற்சங்க செயலாளர் வழக்குரைஞர் கே. பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News