அதிமுக எப்போதும் மக்கள் பணியாற்றும் இயக்கம் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ
அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து சிறுபான்மை மக்களிடம் மனமாற்றத்தை உருவாக்கி அதிக வாக்குகளைப் பெற்றதால்தான் திமுக வெற்றி பெறமுடிந்தது என செல்லூர் ராஜு தெரிவித்தார்
அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து சிறுபான்மை மக்களிடம் மனமாற்றத்தை உருவாக்கி அதிக வாக்குகளைப் பெற்றதால்தான் திமுக வெற்றி பெறமுடிந்தது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்
மதுரை கோரிப்பாளையம் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மேலும் கூறியதாவது:
தமிழக அரசுக்கு அது செய்ய வேண்டிய கடமைகளை நினைவூட்டும் வகையில் அதிமுகவின் நிர்வாக அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற உள்ளது. எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கமான அதிமுக எப்போதும் மக்கள் பணி ஆற்றும். ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணியை அதிமுக தொடர்ந்து மேற்கொள்ளும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற வகையில் மக்களுக்காக அதிமுக போராடும்.
சட்ட திட்டங்களுக்கு உபட்டு காவல்துறை அனுமதியோடு அதிமுக பிரசாரம் நடைபெறும். மக்கள் பிரச்சனை மட்டுமல்லாது அனைத்து பிரச்னைகளையும் அதிமுக தலையிடும். திமுக நிறைவேற்ற முடியத வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது. அனைத்து கடன்களும் ரத்து எனவும், பயிர்கடன் தேசிய வங்கி கடன் ரத்து என பொய்யாக அறிவித்து ஆட்சிக்கு வந்துள்ளனர்.
திமுகவால், எங்கள் ஆட்சியை எந்தக் குறையும் சொல்லமுடியவில்லை. அதனால்தான், ரூ. 350 கோடி செலவழித்து பீகாரில் இருந்து ஒருவரை அழைத்து வந்து நிறைவேற்ற முடியாத கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி ஆட்யியில் அமர்ந்துள்ளனர்.
கூட்டுறவு வங்கி கடன் ரத்து, மகளிர்க்கு மாதாந்திர உரிமை நிதி ரூ. 1000, கல்விக்கடன் ரத்து, நீட்தேர்வு ரத்து என சொல்லி ஆட்சிக்குவந்தவுடன் இப்போது மின்சார வெட்டு உருவாகியுள்ளது. மின்சார வெட்டிற்கு காரணமாக அணில்கள் இருக்கிறது என்ற காரணத்தை புதிதாக கண்டுபிடித்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
12ஆயிரத்து 110 கோடி 16லட்சத்து 43ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரத்து என, அறிவிக்கப்பட்டு சட்டமன்றத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. கடன் இல்லை என்ற சான்றிதழும் வழங்கினோம். அதிமுக ஆட்சியில் மதியம் அறிவிப்பு வெளியிடப்பட்ட அன்று மாலையே தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறிக்கு வந்ததால் சட்டமன்ற அலுவல் காலத்தில் தேர்தல் ஆணைய ஒப்புதலோடு, அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், அவர்கள் அனுமதி தர வில்லை.
பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் தள்ளுபடியை இந்த அரசு தான் நடைமுறைப்படுத்த வேண்டும். தேர்தல் அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கவில்லை.தீடீர் அறிவிப்பால், அரசாணை வெளியிட முடியவில்லை.நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
வரும் 28 -ஆம் தேதி காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து கண்ணியத்தோடு நடந்து கொள்வோம்.நடைபெற்றவுள்ள விழிப்புணர்வு பிரசாரத்த தலைமை அறிவித்தபடி, நடத்துவோம். என்ன முழக்கம், பதாகையிள் என்ன வாசங்கள் என்பதையெல்லாம் தெல்லம் தலைமை செய்து கொடுக்கும். மக்களை ஏமாற்றி திமுக அரசு அமைந்துள்ளது. மகளிர்க்கு இலவசம் என கூறிவிட்டு, உரிய நேரத்தில் பேருந்துகள் வரவில்லை. பெண்கள் வீட்டிலிருந்து காசு எடுக்காமல் வந்து ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த அரசு கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.
பத்தாண்டுகள் ஒரு அரசு சிறப்பாக செயல்படவில்லையென்றால் மாபெரும் வெற்றியை மக்கள் கொடுத்திருப்பார்களா?
திமுகவுடன் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து சிறுபான்மை மக்களிடம் இருந்து எங்களை பிரித்து மனமாற்றத்தை உருவாக்கி அதிகப்படியான சக்திகளை வைத்து கவர்ச்சியான பொய் வாக்குறுதிகளை கொடுத்தும் எங்களை விட 13 லட்சம் வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளனர். ஒன்றரை சதவீதம் தான் நாங்கள் பின்தங்கி இருப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.