மதுரை மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று கொரோனா நிதி டோக்கன்களை கடை ஊழியர்கள் வழங்கினர்
மதுரை மாவட்டத்தில், கொரோனா சிறப்பு நிதிக்கான, டோக்கன்களை, ரேசன் கடைகளின் விற்பனையாளர்கள், வீடுகளுக்கு சென்று வழங்கி வருகின்றனர்;
மதுரை மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று கொரோனா நிதி டோக்கன் வழங்கினர்
கொரோனா நிதி டோக்கன் வழங்கினர்
இரண்டாம் கட்டமாக கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ. 2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொருட்கள் டோக்கன்கள் வழங்கப்பட்டது:
இரண்டாவது தவணையாக கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக ரூபாய் இரண்டாயிரம் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் ஊழியர்கள் ஒவ்வொரு வீட்டுக்கு வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.காலை 9 மணி முதல் 12 மணி வரை ரேஷன்கடைகள் வழக்கம் போல் செயல்படும் ரேஷன் கடைக்கு கூட்டத்தை வருவதை தடுக்க காலை 8 மணி முதல் அவர்களின் இல்லத்திற்கு சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன்களை வழங்கி வருகின்றனர் .
இதில், எப்பொழுது நிவாரணத் தொகை வாங்க வேண்டும் , தேதி, மற்றும் நேரத்தை குறிப்பிட்டு அந்த நேரத்திற்கு வந்தால் போதும் என பொதுமக்களிடம் அவர்கள் தெரிவித்தனர்.
மீண்டும், காலை 9 மணிக்கு கடைக்கு சென்று வழக்கம் போல் பொருட்களை வழங்கி விட்டு 12 மணிக்கு மேல் உணவு அருந்தி விட்டு பிறகு மீண்டும் டோக்கன்களை வழங்கும் பணியை தொடங்குவோம் எனவும் ரேஷன் கடைக்கு யாரும் வரவேண்டாம் எனவும், ரேஷன் கடை ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர் சிறப்பு தொகுப்பானது வரும் 15-ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கதாகும்.