மதுரையில் குழந்தைகளுக்கான நிமோனியா நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது
இந்த தடுப்பூசி, பிறந்த பச்சிளம் குழந்தை ஓன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் ஒன்பது மாதம் ஆகிய மாதங்களில் போடப்படுகிறது.
மதுரையில் குழந்தைகளுக்கான நிமோனியா நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது
மதுரை மாநகராட்சி குழந்தைகளுக்கான நிமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி முகாமினை, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் இன்று (23.07.2021)தொடங்கி வைத்து, பார்வையிட்டனர்.
மதுரை மாநகராட்சி, சாத்தமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி, பிறந்த பச்சிளம் குழந்தை ஓன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் ஒன்பது மாதம் ஆகிய மாதங்களில் போடப்படுகிறது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து புதன் கிழமையிலும் தடுப்பூசி போடப்படும்.
மேலும், அனைத்து மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி போடப்படுகிறது. இந் நிகழ்ச்சியில், நகர்நல அலுவலர் மரு.குமரகுருபரன், உதவி நகர்நல அலுவலர் தினேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்